Posts

Showing posts from July, 2021

தொப்புள் Belly Button

 நம் தொப்புள் என்பது நம்மை படைத்தவர் நமக்கு கொடுத்துள்ள அற்புத பரிசு... 62 வயது முதியவர் ஒருவருக்கு இடது கண் பார்வை மிக மோசமாக இருந்தது. இரவு நேரங்களில் மிகவும் சிரமப்பட்டார். கண் மருத்துவர் பரிசோதனை செய்துவிட்டு அவரது கண்கள் மிகவும் நன்றாக இருப்பதாகவும் ஆனால் கண்களுக்கு இரத்தம் கொண்டு வரும் நரம்புகள் வறண்டு விட்டதால் மீண்டும் பார்வை ஒருபோதும் வராது என்றும் கூறிவிட்டார். அறிவியல் படி, கருவுற்றவுடன் முதல் அணு உருவாகும் இடம் தொப்புள் தான்.  தொப்புள் உருவானவுடன், அது தாயின் நஞ்சுக்கொடியுடன் தொப்புள் கொடி மூலம் இணைக்கப்படுகிறது. நமது தொப்புள் உண்மையிலே ஆச்சரியப்படும் ஒன்று தான். அறிவியல் படி, ஒரு மனிதன் இறந்தவுடன் 3 மணி நேரத்திற்கு தொப்புள் வெதுவெதுப்பாக இருக்குமாம். காரணம் ஒரு பெண் கருவுற்றதும், பெண்ணின் தொப்புள் மூலம் குழந்தையின் தொப்புள் வழியாக கருவிலுள்ள குழந்தைக்கு ஊட்டச்சத்து வழங்கப்படும். முழுமையாக ஒரு கரு குழந்தையாக உருவாவதற்கு 270 நாட்கள் அதாவது 9 மாதங்கள் ஆகின்றன. நமது உடம்பில் உள்ள அனைத்து நரம்புகளும் தொப்புளுடன் இணைவதற்கு இதுவே காரணம்.  தொப்புளே நமது உடம்பின் குவி...

படுக்கையில் சிறுநீர் கழிவதை குணப்படுத்த

 படுக்கையில் சிறுநீர் கழிவதை குணப்படுத்த : சில குழந்தைகள் இரவில் தூக்கத்தில் சிறுநீர் கழித்துவிடுவார்கள் . அவர்களுக்கு பேதி மருந்து தர குணமாகிவிடும். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கே இது பொருந்தும். ஆனால் சில குழந்தைகள் 12,13 வயதான பின்பும் படுக்கையில் சிறுநீர் கழித்துவிடுவார்கள். வயதுக்கு வந்த பெண்கள் இதனால் மிகவும் சிரமப்படுவார்கள். இவர்களை மிக எளிதாக குணப்படுத்தலாம். தேவையான பொருட்கள்: உலர் திராட்சை - 50 கிராம்  மிளகு தூள் - 50 கிராம்  சுத்தமான தேன் - 50 கிராம் முதலில் உலர்  திராட்சையை கல்வத்திலிட்டு அரைத்துக் கொள்ளவும். கல்வம்  இல்லாதவர்கள் சுத்தமான கழுவின அம்மியில் வைத்து அரைத்துக் கொள்ளவும். மெழுகு போல் அரைத்த பின்பு மிளகு தூளை போட்டு அரைக்கவும். நன்றாக அரைத்த பின்பு தேன் சேர்த்து கொள்ளவும். எடுத்து பத்திரப்படுத்தவும்.  உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு காலை, இரவு 5 கிராம் வீதம் சாப்பிட 3 நாட்களில் தூக்கத்தில் சிறுநீர் கழிவது குணமாகிவிடும். மீதம் உள்ளத்தையும் சாப்பிட்டு வர நிரந்தர குணமாகும். இதனை யார் வேண்டுமானாலும் சுலபத்தில் செய்து கொள்ளலாம்

காலை உணவு ஓர் ஆய்வு

ஆரோக்கியமான காலை உணவு ஓர் ஆய்வு:- சிறந்த கல்வி நிலையம்,  மிகத் திறமையான ஆசிரியர்கள், வகுப்பில் எல்லாப் பாடங்களிலும் முதலாவதாக வரும் மாணவராக இருந்தாலும், காலை உணவை அவர் தவிர்க்கும்போது, அவர்களின் இயல்பான திறன் வெளிப்படுவதில்லை என்பது ஆய்வின் வெளிப்பாடு.  பால் மட்டும் குடித்துவிட்டு உணவைத் தவிர்க்கும் குழந்தைகள் காலை 10, 11 மணிக்குள் சோர்ந்துவிடுவார்கள். வகுப்பில் நடத்தப்படும் பாடங்களில் அவர்களால் முழுமையாகக் கவனம் செலுத்த முடியாது. இப்படி மழலைப் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் தொடங்கிக் கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் எனப் பலரும் இன்றைக்குத் தவிர்க்கக்கூடிய ஒரு விஷயமாக உருவெடுத்திருக்கிறது காலை உணவு.  எந்த அளவுக்கு காலை உணவு முக்கியம்? அதைத் தவிர்ப்பதால் எப்படிப்பட்ட விளைவுகள் ஏற்படும்? என சிந்தித்து தெளிவு பெறுவதால் காலை உணவு முக்கியம் என விளங்கும். தவிர்ப்பும் தவிப்பும்:- ஒரு நாளில் அதிக இடைவெளிக்குப் பிறகு நாம் உண்பது (ஏறக்குறைய 10 மணி நேரம்) காலை உணவுதான். அதனால்தான் அதை ‘பிரேக்-பாஸ்ட்’ என்று அழைக்கின்றனர். அதாவது நீண்ட விரதத்தை உடைப்பது என்று அர்த்த...