Posts

Showing posts from November, 2022

பவழமல்லி

https://youtu.be/x7heNea_QwI https://youtu.be/niH0inYpBv8 https://youtu.be/pc1fTLtDQw8 தெய்வீக மரம் பாரிஜாதம்.... கற்பக மரம், பாரிஜாதம், ஹரிசந்தனம், சந்தனம், மந்தாரம் ஆகிய ஐந்து மரங்களும் தேவலோக மரங்களாகும். இந்த ஐந்து மரங்களும் பாற்கடலைக் கடையும் பொழுது வந்ததை இந்திரன் தன் தேவலோகத்திற்காக எடுத்துக் கொண்டார். நிலத்தில் விழுந்த பின்னும் கடவுளுக்குச் சூட்டப்படும் ஒரே ஒரு மலர் பாரிஜாதமே. இப் பூக்களை மரத்திலிருந்து கொய்து இறைவனுக்குச் சூட்டக் கூடாது என்றும் சொல்கிறார்கள். இந்த மரத்தில் இருந்து பூக்கும் மலர்கள் இனிய மணம் வீசும் தன்மை கொண்டவை. பவளமல்லிக்கு மற்றொரு பெயர் பாரிஜாதம். இலக்கியத்தில் சேடல் என்று அழைக்கப்படுகிறது. புட்ப விதி என்னும் நூலில் பவள மல்லிகை சண்பக‘ஞாழல் கோட்டூப்பூவகை’ என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, நாற்பது வகையான கோட்டூப் பூ வகைகளில் பவளமல்லியும் ஒன்று. இந்த மரம் முன்னிரவில் பூத்து மணம் வீசி சூரிய உதயத்துக்கு முன்பே மண்ணில் உதிர்ந்து விடும். பவளமல்லிமரம் மூன்று இலை தொகுப்புகளைக் கொண்டது. இவற்றில் மும்மூர்த்திகளும் உறைந்திருப்பதாக ஐதீகம். மத்தியில் மகாவிஷ்ணுவும், வலது பக்க...

சூரிய வணக்கம்

சூரியநமஸ்காரம். சூரிய நமஸ்காரச் சிறப்பு. சூரியன்தான் இப்பூவுலகில் உயில் வாழும் அனைத்து ஆற்றல்களுக்கும் மூலம். சூரியன் இல்லாவிட்டால் இப்பூலவுகில் வாழ்க்கையே இருக்காது. பல் ஆயிரம் ஆண்டுகளாக சூரியனிடம் இருந்து ஆற்றல் பெறுவதை நம் முன்னோர்கள் ஒரு விஞ்ஞானமாக வளர்த்து வந்துள்ளார்கள். இந்த விஞ்ஞானம் யோகம் எனப்படுகின்றது. சூரிய நமஸ்காரப் பயிற்சியும் யோகா முறைகளுள் ஒன்றாக கருதப்படுவதால் இன்றும் பலர் அதனை கற்றுக்கொள்கின்றனர்.  சூரிய நமஸ்காரத்தில் உடல் அசைவுகளும் மூச்சு ஒட்டமும் இணக்கமாக நடைபெறுகின்றன. நுரையீரல்களில் காற்றோட்டம் தாராளமாகின்றது. இரத்தம் உயிர்க்காற்றால் நலம் பெறுகின்றது. ஏராளமான கரியமில வாயுவையும் பிற நச்சுப் பொருள்களையும் மூச்சு மண்டலத்திலிருந்து வெளியேற்றுவதன் மூலம் சூரிய நமஸ்காரம் உடலுக்குப் பெரும் நன்மை விளைவிக்கின்றது. சூரிய நமஸ்காரம் ஜீரண மண்டலத்திற்கு உயிரூட்டி ஆற்றலை அளிக்கின்றது. கல்லீரல், வயிறு, மண்ணீரல், குடல்கள் எல்லாம் நன்றாக மசாஜ் செய்யப்படுகின்றன. இதனால் மலச்சிக்கல் மறைகின்றது. வயிற்று உறுப்புக்களில் இரத்தம் தங்ககுவதில்லை என்பதால் உடல் உறுதியடைகின்றது.  நினைவ...