வில்வம்
.https://youtu.be/n_dYaTGLY8c https://youtu.be/oB4mt73kQ_w https://youtu.be/VrjXN-8bvaU இருதய ஓட்டை அடைக்கும் வில்வ பழம்: வில்வம் என்றால் உயிர் என்று பொருள். உயிரைப் பாதுகாக்கக்கூடிய பிராணசத்து வில்வத்தில் அதிகம் உண்டு. வில்வ மரத்தில் தான் ஈஸ்வரன் உருவானதாக சிதம்பர ரகசியம் சொல்கிறது. தத்துவ ரீதியாகப் பார்க்கும்போது ருத்திரன் குடி கொண்டிருப்பது கழுத்துக்கு மேல் பாகம். அது பிராண வாயு இருப்பிடம். உடலிலுள்ள பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன், கூர்மன், நாகன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் எனப் பத்துவிதமான நீராவி முறையில் இயங்கக்கூடியது மனித உடலாகும். பிராணன் தலையிலும், அபானன் குதப்பையிலும் (மலப்பை, நீர்ப்பை) ஒழுங்காகச் செயல்பட்டால்தான உடலே ஒழுங்காகச் செயல்படும். பிராண சத்து அதிகமாக வில்வத்தில் உள்ளது. அதன் சுவை கார்ப்பு பொருந்திய கசப்புத் தன்மையாகும். வில்வத்தில் பத்து வகைகள் உள்ளன. அவை சாதா வில்வம், காசி வில்வம், மகா வில்வம், மா வில்வம், பஞ்ச பத்திரி, சப்தபுத்திரி, அஷ்டபத்திரி, நவவில்வம், தசவில்வம், கற்பூர வில்வம் ஆகியவை ஆகும். மர்மெலாஸ். இதன் தாவரவியல் பெயர் ஆக்லெமர்மெலாஸ். மனித உட...