தடுப்பூசி Vaccination
உலகில் 750 கோடி மக்கள் வாழ்கிறார்கள்! அவர்களில் இது வரை கொரோனாவில் 45,66,000 பேர் தான் இறந்துள்ளனர். பாதிப்பு வந்தவர்களில் குணமடைந்தவர்கள் 19,71,00,000. ஆக மிகக் குறைவானவர்கள் இறக்கக் கூடிய – பெரும்பாலானவர்கள் தங்கள் சொந்த எதிர்ப்பு சக்தியால் மீளக் கூடிய – ஒரு நோய்க்கு ஏன் தடுப்பூசி..? உலக மக்கள் தொகையில் அரை சதவிகிதத்தினர் கூட மரணிக்காத ஒரு நோய்க்கு ஏன் தடுப்பூசியை கட்டாயப் படுத்துகிறீர்கள். சரி, வரக் கூடிய நோயை முன் கூட்டியே தடுக்க வேண்டும் என்பதில் நமக்கும் உடன்பாடு தான்! ஆனால், ‘அந்த தடுப்பை பில்கேட்ஸ் முதலான கார்ப்பரேட் முதலாளிகள் தரும் ஊசிகளால் மட்டுமே தடுக்க முடியும்’ என்று நீங்கள் சொல்வதில் தான் நமக்கு உடன்பாடு இல்லை. எங்கள் பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவம் ஆயுர்வேதம், ஹோமியோபதி, நேச்சுரோபதி ஆகியவற்றின் மூலம் நோய் தடுப்பு நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்” என்றால் விட வேண்டியது தானே! ”தடுப்பூசி போட்டால் தான் ரயிலில் பயணிக்கலாம். அலுவலகத்திற்கு வரலாம், போட்டுக் கொண்டால் தான் கல்லூரி மாணவர்கள் வகுப்பறைக்குள் நுழையலாம். தடுப்ப...