Posts

Showing posts from September, 2022

PCOD ஹார்மோன் குளருபடி

அன்புள்ள மாமியார்களே......  வணக்கம்...  PCOD எனும் குணப்படுத்தக்கூடிய  பிரச்சனையால் மன உளைச்சலுக்கு ஆளாகி அவதியுறும் மருமகள்கள் சார்பாக பேசுகிறேன்.. சிறிது செவிமடுங்கள் அன்னைகளே...  நன்றி  இளம்பெண்களுக்கு வரும் PCOD நோயும்  சில தகர்க்கப்பட வேண்டிய மூடநம்பிக்கைகளும் PCOD என்றால் என்ன?  இளம்பெண்களுக்கு ஏற்படும்  சரிசெய்யக்கூடிய ஹார்மோன் குளறுபடி தான் இந்த PCOD.  இதை "நோய்"( disease)  என்ற கணக்கில் சேர்க்க முடியாது.  "குறைபாடு"(deficiency)  என்ற கணக்கிலும் சேர்க்க முடியாது  அதனால் தான் "குளறுபடி" ( Messing up of hormones) என்ற கணக்கில் சேர்த்துள்ளேன்  முறையாக ஹார்மோன்கள் சுரக்காமல் தாறுமாறி சுரப்பதால் இதை "Disorder" என்கிறோம்  ஒரு பூப்படைந்த பெண்ணுக்கு முறையாக நிகழ வேண்டிய நிகழ்வு  பிரதிமாதம் வர வேண்டிய மாதவிடாய் ( Menstruation)  மாதவிடாய் என்பதை சுருக்கமாக கூறவேண்டுமென்றால்  ஒவ்வொரு மாதமும் இனப்பெருக்க வயதை அடைந்த பெண்ணிற்கு அவளது கருவில் ( ovary)  இருந்து ஒரு முட்டை (ovum)  முதிர்ச்சி அடைந...