தத்துவங்கள் 96

https://www.youtube.com/watch?v=g4uYMhSeh7Y

https://www.youtube.com/watch?v=q1BgutFNosM

https://www.youtube.com/watch?v=zIdso_fc_l8

https://www.youtube.com/watch?v=XpZbYfYrNcc

https://www.youtube.com/watch?v=HuWs_c24VnY

தத்துவங்கள் 96 கீழே அதன் விளக்கங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது , இது ஒவ்வொருவரும் யோகா கலையின் மூலம் உணரக்கூடியதே , முழுவதும் உணர்ந்தால் தான் நன்கு புரியும்

ஞானேந்திறியம் - 5 

பொறி - 5 

புலன்கள் - 5 

கர்மேந்திரியம் - 5 

அந்தக்கரணம் - 4 

 ஆக

தத்துவங்கள் - 24 

வித்யா தத்துவம் - 7 

சிவ தத்துவம் - 5 

பிற கருவிகள் - 60 

மொத்தமாக 96  தத்துவங்கள் 

சற்று விரிவாக :

பூதங்கள் 5  

ஞானேந்திறியம் 5 

ஞ்யநேந்திரிய கிரியைகள் 5 

கன்மேந்திரியம் 5 

கன்மேந்திரிய கிரியைகள் 5 

அறிவு1 

கரணம் 4 

நாடி 10 

வாய்வு 10 

ஆசயம் 5 

கோசம் 5 

ஆதாரம் 6 

மண்டலம் 3 

மலம் 3 

தோஷம் 3 

ஈஷனை 3 

குணம் 3 

விராகம் 8 

வினை 2 

அவஸ்தை 5 

மொத்தமாக 96 

தனி தனியாக தத்துவ விளக்கம் :

பூதங்கள் 5 விளக்கம் :

1.ஆகாயம்  : பரவெளி - நிறம் - ஸ்படிகம் , இதன் கூறுகள் : காமம் , குரோதம்                                     லோபம் , மோஹம் , மதம் ; மொத்தமாக 5 

2வாய்வு  :  காற்று - நிறம் - புகை , பச்சை , ஸ்படிகம் . இதன் கூறுகள் :                            இருத்தல்,நடத்தல் ,ஓடல் ,கிடத்தல் ,நிற்றல்மொத்தமாக 5 

 3.தேயு :  நெருப்பு / அக்னி - நிறம் - சிகப்பு , இதன் கூறுகள் : பயம் ,                                                    அகங்காரம் , சோம்பல் , நித்திரை , மைதுனம் ; மொத்தமாக 5 

4.அப்பு :  ஜலம் - நிறம் - ஸ்படிக வெள்ளை . இதன் கூறுகள் : உதிரம் ,                                           மச்சை , சிறு நீர் , மூளை , சுக்கிலம் ; மொத்தமாக 5 

5.பிருதிவி  :   மண் - நிறம் - பொன்மை . இதன் கூறுகள் : மயிர் , தோல்                                நரம்பு , எலும்பு , இறைச்சி மொத்தமாக 5   

ஞ்யநேந்திரியம்  5  விளக்கம் :

1.சுரோத்திரம்  - காது சப்தங்களை கேட்கும்.

2.த்வக்கு -மேல் தோல் - ஸ்பரிச உணர்வு.

3.சட்சூ -கண் - ரூபங்களை பார்க்கும்.

4.சிங்குவை-நாக்கு - அறுசுவைகளை அறியும்.

5.ஆகிரணம்-நாசி - வாசனைகளை அறியும்.

 ஞ்யநேந்திரிய கிரியைகள் 5 விளக்கம் :

1.சப்தம்-செவியில் நின்று கேட்பது. 

2.ஸ்பரிசம்- தேகத்தில் , சர்மத்திலிருந்து சுகமென்பதை தெரிவிக்கும். 

3.ரூபம்-         கண்ணில் நின்று பல காட்சிகளை காண்பிக்கும்.

4.ரசம்-நாவில் நின்று அறுசுவையின் பேதங்களை அறிவிக்கும்.

5.கந்தம்- நாசியில் இருந்து வாசனை பேதங்களை உணர்த்தும்.

கன்மேந்திரியம் 5  விளக்கம் :

1.வாக்கு - வாய் - பேசுவது.

2.பாணி - கை - ஆட்டி அசைத்து வேலை செய்தல்.

3.பாதம் - கால் - நடத்தல்.

4.உபஸ்த்தம் - நீர் வரும் குறி - காம சுகம் அனுபவித்தல்.

5.குதம் - பாயுரு - ஆசனவாய்.

கன்மேந்திரிய கிரியைகள் 5  விளக்கம் :

1.வசனம் - வாயில் இருந்து பேசுவிப்பது.

2.தானம் - கையில் இருந்து கொடுப்பது.

3.கமனம் - காலில் நின்று நடத்துவிக்கும்.

4.ஆனந்தம் - லிங்கம் , யோனியில் நின்று கர்மானந்தம் விளைவிக்கும்.

5.விசர்ஜனம் - அபானத்தில் நின்று மலத்தை வெளியேற்றும்.

அறிவு 1 விளக்கம் :

1.அறிவு அல்லது உள்ளம் . இது ஆகாயத்தின் அம்சம் , ஆகையால் உச்சியில் இருந்து சகலத்தையும் செயல்விக்கும்.

நாடிகள் 10  விளக்கம் :

1.இடகலை - வலது கால் பெரு விரலில் இருந்து அசைந்து இயங்கி  ஏறி இடது      நாசியை பற்றி நிற்கும்.

2.பிங்கலை - இடது கால் பெரு விரலில் இருந்து அசைந்து இயங்கி ஏறி வலது நாசியை பற்றி நிற்கும்.

3.சுழுமுனை - குதத்தை பற்றி நின்று ஏறி பிராண வாயுவை சேர்ந்து சிரசளவு முட்டி நிற்கும்.

4.சிங்குவை - உண்ணாக்கில் நின்று அன்ன சாரம் ஊரவும் பானத்தை விழுங்கவும் செய்யும்.

5.புருடன் - வலக்கண்ணில் இருந்து கருமணியை ஆட்டி வைக்கும்.

6.காந்தாரி - இடக்கண்ணில் இருந்து கருமணியை ஆட்டி வைக்கும்.

7.அத்தி - வலக்காதில் இருந்து சத்தங்களை கேட்க வைக்கும்.

8.குரு - இடக்காதில் இருந்து சத்தங்களை கேட்க வைக்கும்.

9.அலம்புடை - கண்டத்தில் இருந்து நாசியில் கசிந்து நீரை ஏற்ற இறக்க உபாயங்கள் செய்யும்.

10.சங்கினி - உபஸ்தத்தில் இருந்து ஆனந்தத்தில் மிஞ்ச வொட்டாமல் காக்கும்.

வாயு 10 விளக்கம் :

1.பிராணன் - மூலாதாரத்தை சேர்ந்து மேல் நோக்கி இதயத்தில் நின்று நாசியில் சென்று திரும்பி அலையும்படி செய்யும்.

2.அபானன் - குதத்தை பற்றி நின்று ஜாடராக்கினியாய் உஷ்ணத்தை உண்டாக்கி , உண்ட அன்ன பானாதிகளை ஜீரணிக்க செய்யும்.

3.வியானன் - சர்வாங்கமும் வியாபித்து இருந்து பொருத்திடங்கள் எல்லாம் களைப்பும் தவனமும் உண்டாகசெய்யும்.

4.சமானன் - சரீரத்தின் நடுவான நாபிஸ்த்தானத்தில் நின்று ஜீரணித்த அன்ன பானாதிகளை உதிரமாக்கி ரத்த நாடிகளின் வழியாக இழுத்து சென்று சமமாக பரவி தேகத்தை வளர்க்கும்.

5.உதானன் - கண்டஸ்தானத்தில் நின்று சத்ததோடே கலந்து குரலோசை செய்ய , பேசக்கூடிய காரியத்தை செய்யும்.

6.நாகன் - வாயில் இருந்து வாந்தி செய்விக்கும்.

7.கூர்மன் - கண் ரப்பையில் இருந்து விளிக்கசெயும்.

8.கிரிதரன் - மூக்கில் நின்று குறுகுறுத்து தும்மல் உண்டாக்கும்.

9.தேவதத்தன் - மார்பில் நின்று கபத்தை சேர்த்து நெட்டி , கொட்டாவி , விக்கல் உண்டாக்கும்.

10.தனஞ்செயன் - பிராணன் நீங்கின பிறகும் 3 நாட்கள் மட்டும் இருந்து சரீரம் வீங்கி வெடித்து போவான் , அக்னியில் சுடும்போது அப்போதே போய்விடும்.

ஆசயம் 5  விளக்கம் :

1.ஆமாசயம் - அன்னம் , தண்ணீர் பருகுமிடம்.

2.ஜலாசயம் - அன்னம் , தண்ணீர் இறங்குமிடம்.

3.மலாசயம் - மலம் சேருமிடம்.

4.ஜலஞ்சயாசம் - மூத்திரம் சேருமிடம்.

5.சுக்கிலாசயம் - விந்து நிறைந்து இருக்குமிடம்.

கோசங்கள் 5  விளக்கம் :

1.அன்னமய கோசம் - ஸ்தூல சரீரத்தை அழிக்காமல் நிலைக்கசெயும்.

2.பிராணமய கோசம் - பிராண வாயும் கர்மேந்திரியங்களும் சேர்ந்து சொப்பனத்தில் சூட்சும சரீரத்துடன் சேர்ந்து விவகாரம் செய்யும்.

3.மனோமய கோசம் - மலமும் கண்மேந்திரியமும் சொப்பனத்தில் சூட்சும சரீரத்தில் சேர்ந்து செயல்படும்.

4.விஞ்ஞானமய கோசம் - புத்தியும் பொறிகளும் சேர்ந்து சொப்பனத்தில் சூட்சும சரீரத்தில் செயல்படும்.

5.ஆனந்த மய கோசம் - காரண சரீரத்துக்கு ஆதாரமாக இருந்து மேற்கூறிய பிராண , மனோமய , விஞ்ஞானமய கோசத்துடன் சூட்சும சரீரம் நிலைத்து நிற்கும்.

ஆதாரங்கள் 6 சிறு விளக்கம் :

1.மூலாதாரம் - குதத்துக்கும் , குய்யத்துக்கும் மத்தியில் உள்ள திரிகோண ஸ்தானம் , தேவி வல்லபை இதற்க்கு அதிர்ஷ்டான மூர்த்தி - விநாயகர்.

2.சுவாதிஷ்டானம் - முதுகுத்தண்டின் அடிப்பகுதி சமீபம் , ஆண்குறி அல்லது பெண்குறி அடிபகுதியில் உள்ள நாற்கோண ஸ்தானம் , இதற்க்கு அதிஷ்டான மூர்த்தி பிரம்ம தேவர் , தேவி சரஸ்வதி.

3.மணிபூரகம் - நாபிச்தானத்திற்கு மேலுள்ள பிறை போல் வளைந்த ஸ்தானம் ,இதற்க்கு அதிஷ்டான மூர்த்தி மகா விஷ்ணு , தேவி மகாலட்சுமி.

4.அனாஹதம் - ஹிருதய ஸ்தானத்தில் உள்ள முக்கோண ஸ்தானம் , இதற்க்கு அதிஷ்டான மூர்த்தி மகேஸ்வரன் , தேவி மகேஸ்வரி.

5.விசுத்தி - கண்டத்தில் உள்ளது , அருகோனஸ்தானம் , இதற்க்கு அதிஷ்டான மூர்த்தி மகேஸ்வரன் , தேவி மகேஸ்வரி.

6.ஆக்ஞா - முகத்தில் உள்ள புருவ மத்தி - திரிகோண உச்சஸ்தானம், இதற்க்கு அதிஷ்டான மூர்த்தி சதாசிவன் , தேவி மனோன்மணி.

அக்னி மண்டலம் 3  விளக்கம் :

1.அக்னி மண்டலம் -  மூலாதாரத்தில் இருந்து இளகி நாபி வரையில் முயற்சி செய்யும்.

2.ஆதித்த மண்டலம் - நாபியில் இருந்து கண்டம் வரை ஸ்திரம் செய்யும்.

3.சந்திர மண்டலம் - கண்ட ஸ்தானத்தில்  இருந்து புருவ மத்தி வரை ஸ்திரமாகும்.

மலங்கள் 3 விளக்கம் :

1.ஆணவ மலம் - ஸ்தூல சரீரத்தை நான்தான் என்று நினைத்து இருக்கும். 

2.காமிய மலம் - கண்ணால் கண்டவைகளை எல்லாம் இச்சிக்கும். 

3.மாயா மலம் - தனக்கு நேரும் நிலையை தானறியாமலே செய்தல் , கோபம் கொள்ளல்.

முப்பிணிகள் :

1.வாதம் - வாயுவின் கோபம்.

2.பித்தம் - அக்னியின் கோபம்.

3.சிலேத்துமம் - அப்புவின் கோபம்.

ஈஷணை 3 விளக்கம் :

1.தாரேஷனை - பெண்ணாசை ( ஆணாசை ) அதிகம் கொள்ளல்.

2.புத்திரேஷனை - புத்திர , புத்திரி மீது அதிக ஆசை.

3.அர்தேஷனை - பொருள்கள் மீது அதிக ஆசை வைத்தல்.

குணங்கள் 3  விளக்கம் :

1.சாத்வீகம் - நிறம் வெண்மை , சகலரும் மதிப்பர் , அமிர்த குணம் , இதில் லயித்து இருப்பவர் தத்துவ ஞான நிஷ்டை அடைவர். 

2.ராஜஸ குணம் - நிறம் சிவப்பு , இக்குணம் படைத்தவர் அகங்காரம் ஆணவம் உடன் இருப்பார்.

3.தாமச குணம் - நிறம் கருப்பு , இவர்கள் அதிக உணவு சோம்பல் , நித்திரை , மிகுந்த கோபம் எதிலும் நிலை இன்மை உடையவர்.

விரகங்கள் 8  விளக்கம் :

1.காமம் - அதிக ஆசை கொள்ளல்.

2.குரோதம் - பகை கொள்ளல் , அன்பில்லாமை.

3.லோபம் - பிறர்க்கு ஈயாதவர் , கருமி.

4.மோகம் - பலவற்றிலும் ஆசைப்படுதல். 

5.மதம் - பிறரை மதியாதிருத்தல்.

6.மாச்சரியம் - மனதில் சதா விரோத எண்ணங்கள்.

7.இடும்பை - எல்லோரையும் உதாசீனபடுத்துதல்.

8.அஸ்சூயை - பொறாமைக்குணம். 

அவஸ்த்தைகள் 5 ஸ்தானங்கள் :

1.சாக்கிரம் - லலாடஸ்தானம் - ஆக்ன்யா சக்கரம்.

2.சொப்பனம் - கண்டஸ்தானம் - விசுத்தி சக்கரம்.

3.சுழுப்தி - ஹிருதயஸ்தானம் - அனாஹதம் சக்கரம்.

4.துரியம் - நாபிஸ்தானம் - மணிபூரகம் சக்கரம்.

5.துரியாதீதம் - குய்யஸ்தானம் - ஸ்வாதிஷ்டானம் , மூலாதாரம் சக்கரம்.

மொத்தமாக 96 தத்துவங்கள் , இவை அனைத்தையும் அவர் அவர் அனுபவத்தில் உணர்ந்து அறிந்து தாண்டிய பிறகு , முக்தி என்னும் நிலைக்கு அடி எடுத்து வைக்கிறோம் .

தெரிந்தால் தெரியாதது போல் பேசுவான் அறிவாளி. தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் உளரிக் கொட்டுவான் முட்டாள்.

மரங்கள் காற்றைச் சுத்தம் செய்கின்றன

நம்பிக்கை மனசை சுத்தம் செய்கிறது.

Comments

Popular posts from this blog

வசம்பு Acorus calamus

அஜினோமோட்டோ Ajinomoto

எருக்கு