Sprout of cocanut தேங்காய் முளை
https://youtu.be/J7eY2npUmws
https://youtu.be/J7eY2npUmws
https://youtu.be/FaUABQNojiU
https://youtu.be/dFQ3fvZ46S4
காயான பிறகு பூவாவது எது??*
*நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். சமீப காலமாக பார்த்தோமென்றால் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும், புறவழி சாலைகளிலும் தேங்காய் பூ வியாபாரம் அதிக அளவில் உள்ளது.*
*சாலையோரங்களில் விற்கப்பட்டு வரும் ‘தேங்காய் பூ’ வாகன ஓட்டிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது.*
*பச்சைக் குடுமி வளர்ந்த தேங்காயாய்,.. அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் தென்னை நாற்றுக்கள்.., அதன் மேல் சிரட்டையில் வழித்து எடுத்து வைத்திருக்கும் வெண்ணெய் போல வெளியே நீட்டியிருக்கும் ‘தேங்காய் பூ!!’ தற்போது அனைத்து வாகன ஓட்டிகளின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.*
*சாலையில் தள்ளுவண்டியில் அடுக்கி விற்கப்பட்டு வரும் தேங்காய்ப் பூவைப் பார்த்துக் கொண்டே ‘இது எதற்காக’ என்ற கேள்வியுடனே சிலர் கடந்து சென்றுகொண்டிருப்பார்கள்.*
*தேங்காய் பூவினை சிலர் ருசித்திருப்பார்கள்.*
*இதற்கு காரணம் இல்லாமல் இல்லை.*
*தேங்காய், இளநீர் பயன்பாடு எல்லாம் பரவலாகவே இருக்கிறது. ஆனால், ‘தேங்காய் பூ’ எதற்காக, என்ன பலன், வெறுமனே சுவை மட்டுமா போன்ற கேள்விகள் பலருக்கு இருக்கலாம்.*
*இந்த கேள்விகள் எல்லாவற்றுக்கும் பதிலளிக்கிறார் யோகா மற்றும் இயற்கை மருத்துவர் தீபா.*
*பருவ கால தொற்றுநோய்களிலிருந்து முழுமையான பாதுகாப்பை தேங்காய்ப்பூ கொடுக்கும்.*
*தைராய்டு பிரச்னையில் பாதிக்கப்பட்டவர்கள் தேங்காய்ப்பூவை சாப்பிடுவதால் தைராய்டு சுரப்பை குணப்படுத்தலாம்.*
*தேங்காய் பூ உண்பதால் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்கவும் முடிகிறது. இதில் குறைந்த அளவு கலோரி இருப்பதால் உடல் எடை குறைய உதவுகிறது.*
*வளர்சிதை மாற்றத்தை தூண்டுவதால் கொழுப்பு சேராமல் வேகமாக உடல் எடையை குறைக்கவும் முடியும்.*
*புற்றுநோய் செல்களைத் தூண்டுகிற ஃப்ரீ ரேடிக்கல்ஸை நம்முடைய உடலிலிருந்து வெளியேற்றும் ஆற்றலைக் கொண்டது தேங்காய்ப்பூ.*
*தேங்காய்ப்பூ இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது. இதனால் ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையை கட்டுப்படுத்த இயலுகிறது. ஜீரண சக்தி குறைவாக இருந்தால் தேங்காய்ப்பூ சிறந்த மருத்துவமாகும்.*
*இதிலுள்ள மினரல், வைட்டமின் குடலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. மலச்சிக்கலை குணமாக்குகிறது.*
*வழக்கமாக தேங்காயை உண்கிறோம். இளநீராகவும் உண்கிறோம். தேங்காய்ப்பூ என்பது என்னவென்று சிலருக்கு குழப்பம் இருக்கும். முற்றிய தேங்காயில் உண்டாகும் கரு வளர்ச்சியே தேங்காய்ப்பூ ஆகும்.*
*தேங்காய்ப்பூவில், தேங்காய் மற்றும் இளநீரில் இருப்பதைவிட அதிக சத்துக்கள் இருக்கிறது. தேங்காய்ப்பூவில் மிக அதிகமான ஊட்டச்சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி இரு மடங்கு அதிகரிக்கும்.*
*தேங்காய்ப்பூவில் முக்கியமாக முதுமையைத் தடுக்கும் ஆண்டி ஆக்ஸிடெண்ட் நிறைய உள்ளது. சுருக்கங்கள், வயதான தோற்றம், சரும தொய்வு போன்றவை நம்மை நெருங்க விடாது.*
*சிறுநீரக பாதிப்பை குறைக்கும் திறன் தேங்காய் பூவுக்கு உண்டு. மேலும் சிறுநீரகத் தொற்றுநோய்களையும் குணப்படுத்துகிறது. நச்சுக்களை வெளியேற்றி ஆரோக்கியமான சிறுநீரகத்தை தேங்காய் பூவினால் பெறலாம்.*
*அதிக பணிச்சுமை உள்ளவர்கள் மன அளவிலும், உடலளவிலும் மிகவும் சோர்வாக இருப்பார்கள். அப்படி இருக்கும்போது தேங்காய்ப்பூவை சாப்பிட்டால் உடலுக்கு அதிக எனர்ஜி கிடைக்கும்.*
*இதயக் குழாய்களில் படிகிற கொழுப்புகள் மாரடைப்பையும் வேறு சில இதயம் தொடர்பான நோய்களையும் உண்டாக்குகிறது. இந்த கொழுப்பு தேங்கும் பிரச்னையை சரி செய்வதிலும் மிக சிறப்பாக தேங்காய்ப்பூ உதவுகிறது.*
*நம்முடைய சருமத்தை மிக இளமையாகவும், பொலிவுடனும் சருமச் சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருப்பதில் மிக முக்கிய பங்கு தேங்காய்ப்பூவுக்கு உண்டு. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் இளமையைத் தக்க வைத்திருக்க உதவுகிறது.*
*பெண்களுக்கு மாதவிடாய் நேரம் தவிர வெள்ளைப்படுதல் இருப்பதால் இந்த தேங்காய்ப்பூவை உட்கொள்வதால் சீர் செய்ய உதவுகிறது. அதுமட்டுமின்றி அதிகநாள் மாதவிடாய் ரத்தப்போக்கை சரி செய்ய தேங்காய்ப்பூவை உபயோகிக்கலாம்.*
*இளநீர் மட்டுமின்றி தேங்காய்ப்பூவுக்கும் உடற்சூட்டை தணிக்கும் தன்மை உண்டு. உடற்சூட்டினால் ஏற்படும் மூக்கிலிருந்து ரத்தம் கசிவதையும் தடுக்கிறது.*
*இவ்வளவு முக்கியம் வாய்ந்த தேங்காய் பூவினை சுவைத்துப் பார்க்கலாமே .
Comments
Post a Comment